தோழி…

தோழி…

என் இன்ப தருணங்களைவிட
துன்பங்களை பங்கிட்டவள் நீ…
என் இதயம் சோர்ந்தபோது
உன் உற்சாகம் கொடுத்தவள் நீ…
என் வாழ்வில் வந்ததெல்லாம்
உன் நட்பில் உருவாக்கியவள் நீ…
என் வாழ்வே அழகாக
உருவாக்கித் தந்தவள் நீ…

தேவதைகள் பிறப்பதில்லை
நமக்காக இறைவன்
உருவாக்கும் தேவதைகள்
அம்மாவும் தோழியும்தான்

உன் போன்ற தேவதையை
என் வாழ்வில் உருவாக்கி
உலவ விட்டானே…
அதற்காக அந்த
ஆண்டவனை ஆராதிக்கிறேன்!

இன்று உன் பிறந்தநாள்
இன்ப விதை முளைத்தநாள்
இனியும் உன் வாழ்வில்
இன்பமே நிறைந்திருக்க
இதயம் கனிந்து வாழ்த்துகிறேன்…!!!

சிவ உலா: அறிமுகம்

ஓம் நமசிவாய!

அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்!

பல வருடங்களாக என் ஆழ் மனதில் பதிந்திருந்த சில கருத்துக்களையும், நான் சென்ற பிறவியில் செய்த பெரும் பயனால் எல்லாம் வல்ல இறைவன் எனக்கருளிய சில ஞானங்களையும், இன்னும் நான் தேடித்தேடி தெகிட்டாமல் சுகித்த பல தேன்சுவை தமிழமுதத்தையும் இணைத்து தாய்த்தமிழின் தலைவனான தென்னாடுடைய சிவனின் மெய்மறக்கும் மரபுக்கவிதையாக கொடுக்க வேண்டும் என்று நான் பலமுறை நினைத்ததுண்டு. எனக்கு அந்த தகுதி இருக்கிறதா என்கிற எண்ணமும் நேரமின்மையும் சேர்ந்து அதை இதுவரை என்னை செய்யவிடாமல் மாயா தடுத்துவிட்டது.

என் தகுதிகளை ஓரம்கட்டிவிட்டு எந்தை, எம்பெருமான் ஈசனின் பொற்பாதங்களை வணங்கி என் பாரங்களையும், ஞானங்களையும் அவன் பொற்பாதங்களில் இட்டு இந்தக் காரியத்தை தொடங்கியிருக்கின்றேன்.

நல்வரவு!

எனது வலைப்பதிவுக்கு வருகை தந்திருக்கும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வரவு!

இந்த வலைப்பதிவு எனது வாசகர்களான உங்களுடன் பேசுவதற்கு எனக்கு ஒரு வாயிலாக இருக்கும். இங்கு எனது எழுத்துக்கள் மட்டுமின்றி எதைப்பற்றியும் கலந்துரையாடலாம் அல்லது விவாதிக்கலாம்.

நானே பல கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளப் போகின்றேன். அது எது சம்பந்தப்பட்டதாயினும் சரி. அந்தக் கருத்துக்களை படித்துவிட்டு சண்டையிடாமல் அறிவுப்பூர்வமாக உங்களின் கருத்துக்களை பதிவிடலாம் அல்லது என் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கலாம்.

மிக்க அன்புடன்,

அகஸ்ரீ